Ads Area

சவுதியில் தனது மகனை கொலை செய்தவரை மன்னித்து அவர் வழங்கிய 105 மில்லியன் ரியால்களையும் வாங்க மறுத்த தாய்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

தனது மகனை கொலை செய்த கொலைக் குற்றவாளியை மன்னித்து அவரால் வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையான 105 மில்லியன் சவுதி ரியால்களையும் வாங்க மறுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கார் சவுதியைத் சேர்ந்த தாய் ஒருவர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபிய நஜ்ரான் பகுதியில் உள்ள தார் கவர்னரேட்டில் வசித்து வந்த சவுதி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் 18 ஆண்டுகாலமாக சிறையில் வாடிய கொலையாளியான மரணதண்டனைக் கைதிக்கு கொலை செய்யப்பட்டவரின் தாயார் மன்னிப்பு அளிக்க முன்வந்து அவருக்கு மன்னிப்பும் வழங்கியுள்ளார்.

கொலையாளியின் குடும்பத்தினர் அந்தத் தாயாரின் குடும்பத்திற்கு SR 105 மில்லியன் இரத்தப் பணம் (நஷ்டஈடு), கார்கள், தொழில்வாய்ப்புகள், வெற்றுச் காசோலைகள் ஆகியவற்றினை வழங்க முன் வந்தனர் இருந்தும் அந்தத் தாய் அதனை வாங்க மறுத்து விட்டு தான் தன் மகனைக் கொலை செய்த கொலையாளியை அல்லாஹ்வுக்காக மன்னித்து விட்டதாகவும் தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சவுதி அரேபிய இஸ்லாமிய சட்டத்தில், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் கொலைகாரனை அல்லாஹ்வுக்காகவோ அல்லது இரத்தப் பணத்திற்காகவோ மன்னித்தால் மரண தண்டனையை ரத்து செய்யலாம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe