கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரியும் சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் ஏ.எல். றிஸ்பான் அவர்கள் விசேட குழந்தை வைத்திய நிபுணர் தெரிவுப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.
இவர் 2000ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் 10B சித்தியை பெற்றதோடு 2003ம் ஆண்டு க.பொ.த.உ.தரத்தில் 2A 1B சித்தியை பெற்று களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவானார். பின்னர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தனது முதல் நியமனத்தை பெறுப்பேற்று ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக சிறப்பாக கடமையாற்றினார்.
பின்னர் Diploma in child health (DCH) கற்கை நெறியை பூர்த்தி செய்து சிறிய வயதிலேயே 1ம் தர வைத்திய அதிகாரியாக தரமுயர்த்தப்பட்டார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும் (தே.பா), இடைநிலைக் கல்வியை கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் (தே.பா) கற்றிருந்தார்.
இவர் தனது வைத்தியத்துறையில் மட்டுமல்லாது சமூக, சமய, கலாசார, அரசியல் துறைகளில் சிறப்பான தெளிவும் பல்வேறு அனுபவங்களையும் கொண்ட ஒருவருமாவார்.