(எம்.என்.எம்.அப்ராஸ்)
யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஸ்தாபக தலைவர் இஷட்.எம் ஸாஜீத் ஒருங்கிணைப்பில் (15) இடம்பெற்றது.
இதில் பிரதான வளவாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரும்,விடியல் இணையத்தள ஆசிரியருமான றிப்தி அலி கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக விரிவுரையாற்றினார்.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள்,உயர்கல்வியை கற்க்கும் மாணவர்கள்,இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.