சம்மாந்துறை நிருபர்
கல்முனை ஐ.டீ.எம் சிடி கெம்பஸ் இன் கனணி மற்றும் மென்பொருள் உயர் டிப்ளோமா மாணவர்களின் "கல்விக்கு உதவுவோம்" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தரும் ஐ.டீ.எம் நிறுவன பகுதிநேர விரவுரையாளருமாகிய எ.பி அஸ்ரி அவர்களின் வழிப்படுத்தலில் செயற்திட்ட மாணவர்களினால் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் அதிபர் மற்றும் ஐ.டி.எம் நிறுவன உத்தியோகத்தர்களுடன் சுமார் 50 மாணவர்களுடன் கனணி பயிற்சி பட்டறை அண்மையில் நடை பெற்றது.
இதில் செயற்திட்ட மாணவர்களினால் அதிபர் உரையை தொடர்ந்து கனணி பயிற்சி வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தை நோக்கிய விரிவுரைகள், மனப்பயிற்சி செயன்முறைகள் என்பனவும் தொடர்ந்து தொகுத்து வழங்கப்பட்டது.கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .