இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தின் பழைய நண்பர் என்று ஸ்கை நியூஸ் கேள்வி எழுப்பியபோது அதனை மறுத்துள்ளார்.
ஸ்கை நியூஸ் ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ‘ராஜபக்ஷவின் பழைய நண்பர்’ என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்சக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
“நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்” என்று அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.