Ads Area

பாரிய மரம் ஒன்று குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதம்.

வெளிமடை டையரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெளிமடை டையரபாமேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த பெண்ணொருவர் காயங்களுடன் வெளிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பட்டுள்ளார். குறித்த குடியிருப்பில் முறிந்து விழுந்த மரம் தொடர்பில் பல மாத காலமாக தோட்ட நிர்வாகத்திடம் குடியிருப்புக்கு முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்ததுடன் வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றன.


தெமோதரை நிருபர்

ராஜரத்தினம் சுரேஷ்குமார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe