2.98 கிலோகிராம் எடையுடைய தங்கத்தை கடத்தி வந்தவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர் இதன் மதிப்பு 47,211,075 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தி வந்த 35 வயதான தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.