இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், முறைமை மாற்றத்திற்கான அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில் இரண்டு எதிரெதிர் பிரிவுகள் நாட்டை சீரழித்துவிட்டன.
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என தேசத்தின் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மக்கள் போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை கைப்பற்றுவதும் ஜனநாயகம் அல்ல.
இது சட்டத்திற்கு முரணானது எனவும், சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.