எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட 'புனல் தாயின் பயணம்' எனும் நூலினை எழுதிய நூலாசிரியர் அலியார் முஸ்தபா சுக்கூர் அவர்களை OCD அமைப்பினரின் சார்பில் கௌரவிப்பு செய்யப்பட்டது.
நூலாசிரியர்; அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் முன்னாள் அதிபர் MM.நிசார்டீன் அவர்களினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நூலின் பிரதி ஒன்று OCD அமைப்பின் தலைவர் சமூக ஆர்வலர், விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களுக்கு வழஙகப்பட்டதோடு இந்த நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், தமிழா ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நூலாசிரியரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.