Ads Area

கொழும்பு கோடீஸ்வரர் வீட்டில் இடம்பெற்ற திருட்டில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

 


கொழும்பு – கொட்டாஞ்சேவை பகதியில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் பொலிஸார் என கூறி நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 போில் , வர்த்தகரின் மனைவியின் நண்பிகளான இரு பெண்களே அந்த கொள்ளை சம்பவத்திற்கான திட்டத்தை வகுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் பொலிஸார் சந்தேக நபர்களை புதன்கிழமை ( 10) ஆஜர் செய்த போது கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொள்ளையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக கூறப்படும் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், இக்கொள்ளையை திட்டமிட்டதாக பொலிஸ் தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட இரு பெண்களையும் நீதிமன்றம் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை – சென். பெனடிக் வீதியில் கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என அடையாளப் படுத்திக்கொண்டு நுழைந்தோரால் சுமார் இரண்டரை கோடி ரூபா வரை பெறுமதி மிக்க தங்க நகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி முற்பகல் 11.10 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப் பெற்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணைகளின் படி, செவ்வாய்க்கிழமை ( 9) பாலத்துறை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட நால்வரை கொட்டாஞ்சேனை பொலிசார் கைது செய்தனர்.
கார் ஒன்றில் வந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தைஅரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தாப்பிச் சென்றுள்ளதாக கூறிய பொலிசார் அறிவியல் தடயங்களை வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகையின் ஒரு பகுதியை பொலிசார் மீட்டிருந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரான வர்த்தகரின் மனைவியின் நண்பிகளும் அவர்களுக்கு நெருக்கமான இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை தொடர்பிலான திட்டம் வர்த்தகரின் மனைவியின் நண்பிகளுடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், கொள்ளையிடப்பட்ட வர்த்தகர் உண்டியல் பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையவர் என்பதால், கொள்ளை தொடர்பில் அவர் பொலிசில் முறையிடமாட்டார் என கொள்ளையர்கள் நம்பியதாக விசாரணைகளில் தெரிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe