Ads Area

பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தட்டுப்பாடு...!


பொலித்தீன் விதைகள் இறக்குமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக அரிசி மற்றும் மரக்கறிப் பைகள் உற்பத்தி மற்றும் கொரோனா பாதுகாப்பு உடைகள் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

04 மாதங்களில் பொலித்தீன் விதைகள் இறக்குமதி நடைபெறவில்லை என தெரிவித்த தொழிலதிபர்கள், விரைவில் வெளிச்சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். 

பொலித்தீன் விதைகள் (பொருள்) இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 200 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பொலித்தீன் விதைகள் தற்போது 1250 முதல் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது .

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொலித்தீன் விதைகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், 

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மூடல் போன்ற காரணங்களால் ஏற்கனவே பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான கொரோனா பாதுகாப்பு உடைகள் பொலித்தீன் மணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாகவும், 

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அதற்குத் தேவையான சூட் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe