Ads Area

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்ற மின்னொளி விளையாட்டுப் போட்டிகளால் இரவு நேரங்களில் இப்பிரதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாகவும் ஒழுக்க நெறிமுறை, கட்டுக்கோப்பு சீர்குலைந்து வருவதாகவும் வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது குறைவடைந்து செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான காலம் நெருங்கி வருவதையும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் மின்சார நெருக்கடி போன்ற காரணங்களை மையப்படுத்தி Beach Circle உள்ளிட்ட பல பொது அமைப்புகள், மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை உடனடியாகத் தடை செய்யுமாறு முதல்வரைக் கோரியிருந்தன.

இதையடுத்தே கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழுள்ள மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மறு அறிவித்தல் வரை மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை முதல்வர் ஏ.எம்.றகீப் மேற்கொண்டுள்ளாார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe