இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் 6 புதிய விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விமானங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
ஐதராபாத்தில் இருந்து ரியாத்துக்கு ஒரு புதிய தினசரி நேரடி விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஐதராபாத்தில் இருந்து தோஹா வரை புதிய விமானம் இயக்கப்படும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.
அதேபோல் மங்களூர்-துபாய் இடையே ஒரு புதிய விமானம் இயக்கப்படும் என்றும், மேற்கண்ட மூன்று வழித்தடங்களிலும் மறுமுனையில் இருந்தும் இயக்கப்படும் என தெரிகிறது.
அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஐதராபாத் முதல் தோஹா வரையிலும், அதேபோல் ஐதராபாத் முதல் ரியாத் வரையிலான விமானங்களைத் தொடங்க இண்டிகோ இட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மங்களூரிலிருந்து துபாய்க்கு அக்டோபர் 31 முதல் புதிய விமானம் இயங்கும்.
இண்டிகோவின் தலைமை வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் அவர்கள் இந்த புதிய விமானங்கள் இயக்கப்படுவது குறித்து கூறியபோது, 'ரியாத் உடனான புதிய இணைப்பு வணிக இணைப்பை மேம்படுத்தும். அதேபோல் அல் மஸ்மாக் கோட்டை, தேசிய அருங்காட்சியகம், ஹீட் குகைகள், இமாம்
துர்கி பின் அப்துல்லா இராண்ட் மசூதி மற்றும் இங்டம் சென்டர் டவர் போன்ற சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.
மேலும் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கள் விமானங்களில் மலிவு விலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்யலாம்' என்று சஞ்சய் குமார் அவர்கள் கூறியுள்ளார்.
thanks-khaleejtamil.com