Ads Area

125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு.

 


வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை (19) நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இறுதிச்சடங்கை காண திரைகள் அமைக்கப்படும் என்றும் ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

1997இல் இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு, 2012இல் லண்டன் ஒலிம்பிக்ஸ் என பிரிட்டன் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளை காட்டிலும், ராணியின் இறுதிச்சடங்கிற்கு அதிக மக்கள் வரக்கூடும் என்பதால் பலத்த ஏற்பாடுகளை செய்திருக்கும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe