Ads Area

சிறுவர் தினத்தை முன்னிட்டு அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொண்டாட்டம் !

 (நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்)


“சகல பிள்ளைகளுக்கும்  சிறந்ததொரு எதிர்காலம்”எனும் தொனிப் பொருளிலான  உலக சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனை கல்வி வலய கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துர் ரசாக் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் மற்றும் கெளரவ அதிதிகளாக மக்கள் வங்கி கல்முனை கிளை முகாமையாளர் அப்துல் சலாம், சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர்

எம்.எச்.எம்.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது பாடசாலையின் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் பிரதி அதிபருமான ஐ.எல்.எம்.ஜின்னா, உதவி அதிபர் இ.றினோஸ் ஹஜ்மீன், ஆசிரியர்கள், விளையாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்,பாடசாலை நலன்விரும்பிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை வரலாற்றில் மிகவும் சிறப்பான முறையில் சிறுவர் தின நிகழ்வுகள் யாவும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இதனடிப்படையில் சிறுவர் தின சிறப்பு காலை ஆராதனை நிகழ்வு,"ஆரோக்கியத்திற்கு ஒருமணி நேர உடற்பயிற்சி" என்ற செய்தியுடன் பாடசாலை தரம் 09, 10,11 மாணவர்கள் பங்குபற்றும் விழிப்புணர்வு வீதியோட்டம், சிறுவர் உரிமை பாதுகாப்பு மற்றும் எமது நாடும் எமது பிரதேசத்திற்கும் சவாலான போதை வஸ்து பாவனையை தடுத்தல், போதைவஸ்தற்ற சமூகம் தொடர்பாக தரம் 06,07,08 மாணவர்கள் பங்குபற்றும் விழிப்புணர்வு நடைபவணி, மாணவர்களுக்கான விசேட அன்பளிப்பு வழங்குதல், ஆரம்ப பிரிவு, விசேட தேவைப் பிரிவு மற்றும்  ஏனைய  மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான விளையாட்டுச் செயற்பாடுகள், தரம் 08, 09,10,11 ஆண் மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe