Ads Area

சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் 2023/2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு!

 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் 2023/2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இளைஞர் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் அஸ்ஷேக், அஸ்ஸய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி,நக்ஸபந்தி,ஜிஸ் தி,ஜதரரூசி,ஸூபி) அவர்களின் வழிகாட்டலிலும், தவிசாளர் மெளலவி ஏ.எம்.அஸ்பான் (அல் - கெளஸி) அவர்களின் தலைமையிலும் அஸ்ஸய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்) அவர்களின் முன்னிலையிலும் மற்றும் சற்குரு இளைஞர் பேரவையின் ஆலோசகர் எம்.எம்.சப்றாஸ் மன்சூர் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதன்போது அமைப்பின் 2023/2024ஆம் ஆண்டுக்கான சற்குரு இளைஞர் பேரவை நிர்வாக தலைவராக எம்.எச்.எம்.றஸான் தெரிவுசெய்யப்பட்டதுடன் உப தலைவராக ஏ.எம்.எம்.ரிழ்வான் ஆசிரியரும் செயலாளராக தொழிலதிபர் எம்.என்.எம்.றிஸ்தி உபசெயலாளராக ஐ.எம்.எம்.அப்ளல்  பொருளாளராக சி.எம்.எம்.சப்னாஸ் உபபொருளாளராக ஏ.எம்.ஹாஜீப் ஆகியோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர்





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe