Ads Area

"ஒன்லைன்" (Online) ஊடாக எரிவாயுவை பெற்றுக்கொள்ள வசதி.

 இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு தீர்வாக ,வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தமது அன்புக்குரியவர்களுக்காக லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

கையடக்க தொலைபேசி (மொபைல் போன்) யை பயன்பாடுகள் மூலம் உலகின் எந்த நாட்டிலிருந்தும் லிட்ரோ எரிவாயுவை ஆர்டர் செய்யலாம், எனவே பின்வரும் செயலிகளுக்கு சென்று லிட்ரோ எரிவாயுவை ஆடர் செய்ய முடியும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

iOS: https://apple.co/3zesrlk அல்லது Android: https://bit.ly/3suuJsQ உள்ளீடுகளை அணுகுவதன் மூலம் Litro Gas ஐ ஆர்டர் செய்யும் வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe