Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்.

 

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு  தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.ஆர்.எம் தெளபீக்,கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ்,சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா,ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், 

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் பங்குபற்றுதலுடன்   சம்மாந்துறை  பிராந்தியத்தில்  தேவையுள்ள மூவினத்தையும் சேர்ந்த சுமார் 100  பயனாளிகளுக்கு  நேற்று (30) கண்புரை (Cataract)  சத்திரசிகிச்சை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கம்பஹா வைத்தியசாலையை சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்  வைத்தியர். ஜே.டி. டயஸ்,  வைத்தியர். அசேல அபேதீர மற்றும் வைத்தியர். அஹமட் ஜெசா குழுவினருடன் சம்மாந்துறை ஆதார  வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர். ஏ.ஆர். நியாஸ் அஹமட், கண் வைத்தியஉத்தியோகத்தர் வைத்தியர். அல் ஆமீன் றிசாத் மற்றும் வைத்தியர்கள், விஷேட  தாதிய உத்தியோகத்தர்கள், விடுதி முகாமையாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள்,  சுகாதார உதவியாளர்கள் அனைவரினதும்  அர்ப்பணிப்பு மிக்க சேவை பாராட்டத்தக்கது.  

இன் நிகழ்வுக்கு Assist RR நிறுவனம்,  வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, சம்மாந்துறை லயன்ஸ் கழகம், SWDC போன்ற அமைப்புக்கள் அனுசரணை வழங்கியமை  குறிப்பிடத்தது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe