Ads Area

சம்மாந்துறையில் காணி அளிப்பு மற்றும் அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு!


சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலாக பிரிவில் 232 க்கும் மேற்பட்ட காணி அளிப்பு மற்றும்அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு   சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபா  தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(07) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது . 

இன் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர்  யு.எம் அஸ்லம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளர்ஏ.எச்.எம். அன்சார்  அவர்கள் கலந்து கொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.மேலும்


இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி தசநாயக்க , கிழக்குமாகாண உதவி காணி ஆணையாளர் ஜி. ரவிராஜன் ,அம்பாரை மாவட்ட மாகாணங்களுக்கிடைப்பட்ட  காணிஆணையாளர் இஸ்திகார் பானு, ஆகியோர்களும் அதிதிகளாக மேலதிக மாவட்ட பதிவாளர்  ஏ.கே ரினோஷா ,சமுர்த்தி தலைமைபீடமுகாமையாளர் யு.எல்.எம். சலீம், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எம்.எல்.தாசிம் , சம்மாந்துறை பிரதேச செயலக தலைமை காணி உத்தியோகத்தர் டி.கே.எம் . ஜவாஹிர் மற்றும் காணிஉத்தியோகத்தர் எம்.ஹமீஸ் ஏனைய காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், நிலஅளவை திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe