Ads Area

இஸ்லாம் பாடப்புத்தக விவகாரம் : நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் அரசியல் தலைவர்கள், உலமா சபையினரை சந்தித்து பேச்சு !

 நூருல் ஹுதா உமர்

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநிேயாகம் செய்தல் தொடர்பில் நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நுறாமித் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த இரு தினங்களாக நாட்டின் பல இடங்களிலும் வைத்து இடம்பெற்று வருகின்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகங்களை மீள விநியோகம் செய்தல் தொடர்பில் துரித கவனம் செலுத்துமாறும் முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும்  நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரை இணைத்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் சந்திப்பினை ஏற்படுத்தித் தருமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடமும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடமும் நீதிக்கான மய்ய பிரதிநிதிகள்  கேட்டுக்கொண்டனர்.

மேலும் இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகங்களை மீள விநியோகம் செய்தல் மற்றும்  பாடப் புத்தகங்களை திருத்தம் செய்தல் தொடர்பாக துரித கவனம் செலுத்துமாறு நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் வேண்டுகோளொன்றையும் விடுத்துள்ளனர்.

இச்சந்திப்பில் நீதிக்கான மய்யத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் தொழிலதிபர் ஏ.ஏ. அஷ்ரஃப் அலி, சட்டத்தரணிகளான  றைசான், நஜீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe