Ads Area

தேசியரீதில் தைக்கொண்டோ கராத்தே போட்டியில் தாங்கம் வென்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை.

 (யூ.கே. காலித்தீன், எஸ். ஏ. அஷ்ரப்கான்)


இம் மாதம் 21,22 மற்றும்23 ஆகிய தினங்களில் கேகாலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை  பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட  தைக்கொண்டோ கராத்தே சுற்று போட்டியில் கலந்து கொண்ட கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்களம் என மொத்தமாக தேசிய ரீதியில் 5 பதக்கங்களை பெற்று மாகாணத்திற்கும், வலயத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

இதில் 20 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான 80-87Kg எடைப் பிரிவில் ஜே.ஏ. சுமைட்  தங்க பதக்கமும்,  74-80 kg எடைப் பிரிவில் என்.எம். நுஸ்ரி வெள்ளிப் பதக்கமும், 63-68 kg எடைப் பிரிவில் ஏ.எல்.எம். அப்ரி வெண்கலப் பதக்கத்தையும்,  +87 kg எடைப் பிரிவில் ஏ.எம். நாஸிக் அன்சாப்  வெண்கல பதக்கத்தையும், 18 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான +74kg எடைப் பிரிவில் ஜே.ஏ. சுரைப் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

இவ் வரலாற்று வெற்றியை பெற உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும், தமது உச்ச திறமைகளை வெளிப்படுத்தி இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் யூ.எல்.எம். இப்றாஹீம் அவர்களையும், உதவி பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஏ. சிஹாப், எம்.எச்.ஏ. ஹஸீன், ஏ.ஏ. ஹம்தான், விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீர், உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களான சோபா (ZOFA) அமைப்பினரினால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

சாஹிரா தேசிய பாடசாலையானது இப்போட்டியில் கலந்து கொண்டமை இதுவே  முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe