Ads Area

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் உயர்வு.

 

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 100 ரூபா என்ற கட்டணம்  200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக அறவிடப்படும் 250 ரூபா என்ற கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe