Ads Area

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!

 இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எச்.ஐ.வி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எயிட்ஸ் நோயாளிகளுக்காக வருடத்திற்கு சுமார் 100,000 க்கும் மேற்பட்ட சோதனை கருவிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படுகின்றமையினால் அவர்களுக்கு வருடத்திற்கு சுமார் 350,000 சோதனை கருவிகள் தேவைப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

சில சந்தர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் பரிசோதனை நடத்தாமல் இரண்டாவது மூன்று மாதங்களில் இருந்து பரிசோதனைகளை நடத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடம் ஏற்கனவே சோதனை கருவிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

thanks-seithi



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe