Ads Area

வாட்ஸ்அப் பயனர்களே சர்ச்சைக்குரிய செய்திகள், ஆபாச படங்களை பகிர்ந்தால் அக்கவுண்ட் பிளாக் தான்.

 

உலக அளவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பல விதமான சமூக வலைத்தளங்களை பண்ணி வருகின்றனர். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற ஆப்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் வாட்ஸ்அப் செயலில் அனைவருக்கும் மிக எளிதில் விஷியங்களை பகிர்வதற்கு உதவுகிறது. மேலும் இந்த ஆப்பில் புது புது அப்டேட்கள் வருவதால் வாட்ஸ்அப் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கிட்டத்தட்ட 23 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டது. ஆனால் எதற்கு முடக்கப்பட்டது என்ற காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பினர். 

இந்த சூழலில் இதற்கான காரணத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது சர்ச்சைக்குரிய செய்திகள், ஆபாச படங்கள், அரசியல் ரீதியான போன்ற சம்பவங்களை பகிர்ந்தால் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்.

மேலும் லேப்டாப், மொபைல் போன்ற பொருட்களை செயலிழக்க செய்யும் சாப்ட்வேர்களை அனுப்பினால் கணக்குகள் முடக்கப்படும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற வலைத்தளங்களை தவிர்த்து வேற ஆப்களில் வாட்ஸ் ஆப் பதிவிறக்கம் செய்தால் அக்கவுண்ட் கிளோஸ் செய்யப்படும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe