(பிராந்திய செய்தியாளர்)
இது தொடர்பில் அரசியல்வாதிகளிடமும் அரச நிருவாகத்தினரிடமும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டும் ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இறக்காமம் நன்னீர் மீனவ சங்கமும் . இறக்கமாம் கால்நடை பண்ணையாளர் சங்கம், விவசாயக் குழு என்பன இணைந்து மேற்படி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக அம்பாரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
எனவே இது விடயம் தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகளை தெளிவூட்டல் அமர்வும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இறக்காமம் 1-9 நன்னீர் மீனவ சங்கத்தின் தலைவர் என். நிஸ்வி அவர்களின் தலைமையில் 2022.10.02 ஆம் திகதி (இன்று) ஞாயிற்றுக் கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், உதவி தவிசாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.நௌபர், முன்னாள் தவிசாளர் ஜே.கே.ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி ஆகியோரின் பிரதம பங்கேற்புடன் நடைபெற்றது.
மேலும் இறக்காமம் பிரதான பள்ளிவாசல் தலைவர்கள், பிரதேச ஜம்மியதுல் உலமா, கால்நடை பண்ணையாளர் சங்க உறுப்பினர்கள், நன்னீர் மீனவ சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளனம், சமூக ஆர்வளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.




