Ads Area

இளைஞர்களை நல்லிணக்கத்திற்காக வலுவூட்டும் நிகழ்வு !

 (நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)


ஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA)  நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர், யுவதிகளை நல்லிணக்கத்திற்காக வலுவூட்டும் வகையில் வை-சென்ச் (y-change ) திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில்  மாவட்ட இளைஞர்கள் நல்லிணக்க குழுவிற்கான திட்ட அறிமுக நிகழ்வு (26) இன்று அம்பாரையில் இடம்பெற்றது. அம்பாரை மாவட்டத்தில் இளைஞர்கள் நல்லிணக்க குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் வை-சென்ச் y-change திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ. சுதாவாசன், அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே. டி. ரோகிணி, எச். எஸ். ஹசனி, டப்ளியு.எம்.சுரேகா, எம்.எல்.ஏ.மாஜீத், சமாதான தொண்டர்கள், உட்பட அம்பாரை மாவட்ட  இளைஞர் நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe