எலக்ட்ரிக் வாகனங்களின் எழுச்சி, சுற்றுச் சூழல் பாதிப்பு, நெட் ஜீரோ இலக்கு என உலக நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய்-க்கு எதிரான பாதையைத் தேர்வு செய்துள்ள நிலையில் அரபு நாடுகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
OPEC மற்றும் OPEC+ அமைப்பில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் பெரும் பகுதி வருவாய், வர்த்தகம் கச்சா எண்ணெய் சார்ந்து இருக்கும் நிலையில், இது தலைகீழாக மாறும் நிலையில் அரபு நாடுகளுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளும் முன் முக்கிய முடிவை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா போட்டிப்போட்டுக் கொண்டு பார்மா முதல் டெக் வரையில் அனைத்துத் துறை நிறுவனங்கள், தொழிற்சாலையை ஈர்த்து வருகிறது.
சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் ஞாயிற்றுக்கிழமை 40 பில்லியன் ரியால் அதாவது 10.64 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை அந்நாட்டின் சப்ளை செயின் துறை வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியைத் தொடங்கி உள்ளார்.
முகமது பின் சல்மான் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சொந்த முயற்சியாக இந்த 10 பில்லியன் டாலர் முதலீட்டு திரட்டும் திட்டம் உள்ளது. சவூதி அரேபியா நாட்டுக்கான விநியோகச் சங்கிலி துறையில் வர்த்தகம் மற்றும் தளத்தை அமைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகையாகச் சுமார் 10 பில்லியன் ரியால்-களை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
25 சதவீத தொகை மானியம் அதாவது சவூதி அரேபியா நாட்டுக்கான விநியோகச் சங்கிலி துறையில் வர்த்தகம் மற்றும் தளத்தை அமைக்கும் நிறுவனம் முதலீடு செய்யும் தொகையில் 25 சதவீத தொகையை ஊக்கத் தொகையாகப் பெற முடியும். சவூதி அரேபியா இளவரசரின் இத்துறையின் முதலீட்டு டார்கெட் 40 பில்லியன் ரியால், ஊக்கத் தொகை மட்டுமே 10 பில்லியன் ரியால்.
கச்சா எண்ணெய் துறை சவூதி அரேபிய அரசு கடந்த ஆண்டுத் தன்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கச்சா எண்ணெய் துறையை மட்டும் சார்ந்து இருக்காமல் பல்வகைப்படுத்தல் திட்டத்தின் கீழ் அடுத்த 10 வருடத்தில் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஹப் ஆக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சப்ளை செயின் துறை இதற்காகச் சவூதி அரேபியா அந்நாட்டின் உள்கட்டமைப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட திட்டத்தில் மட்டும் சுமார் 500 பில்லியன் ரியால்களுக்கு மேல் முதலீடு செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்ததுள்ளது. சப்ளை செயின் துறை வளர்ச்சிக்காகச் சவூதியில் அதிகப்படியான special economic zone உருவாக்கப்பட உள்ளது.