Ads Area

சட்டவிரோதமாக சுற்றுலா வீசா மூலம் டுபாய் அனுப்பிய இருவர் கைது!

 சட்டவிரோதமான முறையில் பெண்களை சுற்றுலா வீசா மூலம் டுபாயில் வேலைக்கு அனுப்பிய பெண் உட்பட இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை சுற்றுலா விசாவில் வேலைக்காக டுபாய்க்கு அனுப்பியுள்ள நிலையில் உறுதியளித்தபடி அங்கு பணி வழங்கப்படவில்லை என அவரது கணவர் பணியகத்திற்கு அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர அம்பாறையைச் சேர்ந்த பெண்ணொருவரும் சுற்றுலா விசாவில் வேலைக்காக டுபாய் சென்றுள்ளார்.


வாக்குறுதியளித்தபடி வேலை கிடைக்காத காரணத்தினால் இலங்கைக்கு திரும்பியமை தொடர்பில் அவர் பணியகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதன்படி செயற்பட்ட புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அம்பாறை - சம்புர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை வழங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்தது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe