வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-வவுனியா தீபன்-
(thanks for website-adaderana)