Ads Area

கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு.

 கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தென்கொரிய சர்வதேச கூட்டுறவு கடற்றொழில் அமைப்பின் தலைவர் Im Joon Teak ஆகியோருக்கிடையில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


இதன்படி, மீன்பிடித் தொழில் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர். தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், கொரிய அரசும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன.


கொரிய மீன்பிடித் தொழிலுக்காக தற்போது E9விசா வகையின் கீழ் இணைத்துக்கொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கொரிய மீன்பிடி வேலைகளுக்காக இரண்டு முறை சென்ற தொழிலாளர்கள் மீண்டும் அந்த வேலை வாய்ப்பைப் பெறுவது குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, E7 அல்லது E10 வகை விசாக்கள் மூலம் இந்த வாய்ப்பை வழங்குவது குறித்து மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, கொரிய மீன்பிடித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்குமாறு, கொரிய சர்வதேச கூட்டுறவு சங்கத்தின் தலைவரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு அவர்களிடம் இருந்து நல்ல வரறேபும் கிடைத்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe