Ads Area

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம் !

 நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பிரதிப்பொருளாளராக சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.சி. எஹியாகான் சபையோரால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்டாய உயர்பீட கூட்டத்தில் முதலில் பொருளாளராக சபையோர் ஏ.சி. எஹியாகானை தெரிவுசெய்திருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசிமுக்கு இப்பதவியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டவுடன் தாமாக முன்வந்து அப்பதவியை பைசால் காசிமுக்கு ஏ.சி. எஹியாகான் விட்டுக்கொடுத்து விட்டு பிரதிப்பொருளாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் பேரியக்கம். இதில் பதவிகளை விட மக்களின் நலனே முதலில் கவனிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளை கௌரவிக்கவேண்டிய தேவை எம் எல்லோருக்கும் இருக்கிறது. தலைமை அப்பதவியை அவருக்கு வழங்கும் விருப்பத்தை என்னிடமே வழங்கியதால் தலைமைத்துவ கட்டுப்பாட்டையும், கட்சிக்கான விசுவாசத்தையும் முதற்கொண்டு இந்த முடிவை எடுத்தேன். பேராளர் மாநாட்டில் கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் நானே பெற்றேன். தொடர்ந்தும் மு.காவின் வளர்ச்சியில் என்னை அர்ப்பணிக்க தயராக உள்ளேன். கட்சி பதவிகளை விட மக்கள் சேவையே முக்கியம் என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe