கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின்(Eastern Cancer Care Hospice) நிதி சேகரிப்பு உண்டியல்களை விநியோகிக்கும் மாபெரும் வேலைத்திட்டமொன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 07.11.2022 அன்று நடைபெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு வேலைத்திட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேச மக்களின் தொடர்ச்சியான பங்களிப்புக்களும் இருக்கவேண்டும் என்ற தூய நோக்கத்தின் அடிப்படையில் சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முதலாம் கட்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் தலைவர் கலாநிதி Lion ZA.Basheer அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் SMM.Haneefa , பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி Jayalath ஆகியோருடன் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளர்சபை உறுப்பினர்களான Alhaj.SM.Nafeer (சம்மாந்துறை), Alhaj . AG. Ajwath (காத்தான்குடி), U.NoohuLebbe(ஏறாவூர் ) மற்றும் சட்டத்தரணி MBM. Fowzan LLB (சம்மாந்துறை) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
தேசத்தின் மக்கள் நலன்கள் மற்றும் பொதுவான நலன்புரி வேலைத்திட்டங்களுக்கு உயரிய பங்களிப்புக்களை தொடர்ந்து வழங்கிவரும் பெருமைக்குரிய சம்மாந்துறை மண் , புற்றுநோயாளர்களை இலவசமாக பராமரிக்கும் Eascca Hospice இற்கு இணைந்து கைகொடுத்து செயற்பட ஆரம்பித்திருப்பது மிகவும் ஆரோக்கியமான , மகிழ்ச்சியான விடயமாகும்.
சம்மாந்துறை மண்ணில் தமது மக்களுக்கான சிறப்பான மற்றும் காத்திரமான சேவைகளை ஆற்றிவரும் சம்மாந்துறை லயன்ஸ் கழகம் இந்த நிகழ்வினை மிகவும் திறம்பட , நேர்த்தியாக நடாத்தி முடித்தது. அந்தவகையில் நிகழ்வில் கலந்து சிறப்பான பங்களிப்புக்களை நல்கிய லயன்ஸ் கழக உறுப்பினர்களான செயலாளர் Lion AJM றாபி MJF, பொருளாளர் Lion SM நபீர் MJF, பணிப்பாளர்களான Lion MIM. சியாத் MJF, Lion MBM. பௌஸான் சட்டத்தரணி, Lion G. சாஹிர் அஹமட் MJF, Lion MIA. ஜலீல், Lion Dr. ARM. சிறாஜ், Lion HM. சியாஸ் முஹம்மட், Lion அனாப் MJF ஆகியோரை கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் சார்பாக மனந்திறந்து பாராட்டுவதுடன் , வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.