சம்மாந்துறை பிரதேச சபையினால் பொருளாதார அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கமைய வளத்தாப்பிட்டியில் கழகத்தின் பெண்கள் வியாபார நடவடிக்கை தொடர்பான பயிற்சியை நிறைவுசெய்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதேச சபை உறுப்பினர்களான கே.குலமணி, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா ஆகியோர்களின் முயற்சியினால் வளத்தாப்பிட்டி பொதுச்சந்தை கட்டிடத்தை 06 மாதங்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்பயிற்சியில் ஈடுபடும் பெண்களின் தொழில் பயிற்சி தொடர்பான பயிற்சி நடவடிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌசாட் அவர்கள் கடந்த சனி, ஞாயிறு (2022.11.05, 2022.11.06) ஆகிய தினங்களில் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பொருத்தமான ஆலோசனைகளையும் வழங்கியபோது.