Ads Area

நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களுடன் கூடிய பௌதீக அபிவிருத்தியினை மேம்படுத்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா !

 நூருல் ஹுதா உமர்


இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான கல்விச் சுற்றுலா முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாடின் ஒருங்கிணைப்பில் பாலர் பாடசாலைகளில் கற்றல் வட்டங்களை நிறுவுதல் தொடர்பான விசேட களப் பயணமாக இக்கல்விச்சுற்றலா அமைந்திருந்ததுடன் நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களுடன் கூடிய பௌதீக அபிவிருத்தியினை கற்றல் வட்டங்களை நிறுவுவதன் மூலம் அடைந்து கொள்ளல் எனும் நோக்கோடு இக்கல்விச்சுற்றுலா அமைந்திருந்தது.


இறக்காமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அஹமட் நஸீல் தலைமையில் இடம் பெற்ற இக்கல்விச் சுற்றுலாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் - அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.ஏ.பி.எஸ்.விஜேரத்ன, இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப், ஆலயடி வேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா, அம்பாரை பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனுஜா, மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe