Ads Area

சௌதி அரேபிய செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

 இலங்கைக்கான சௌதி அரேபிய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


சௌதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாடு செல்வதற்கு முன் அந்நாட்டின் பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, சௌதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் இலங்கைக்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.


அந்த நிர்மாணத் திட்டங்களுக்கு இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தற்போது சௌதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe