அண்மைய நாட்களில் நுகர்வோருக்கு எரிபொருளை விநியோகம் செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு எரிபொருளை விற்பனை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறுகிறது.
எரிபொருள் விற்பனை நிறுத்தம்
சமீப நாட்களாக சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் நிலையங்கள் அருகே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிபொருள் விலை
இதேவேளை எரிபொருள் விலை குறையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.