Ads Area

டெங்கு பரவக்கூடிய வகையில் காணப்பட்ட வீடுகள், பொது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

 நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு அதிகமாக பரவுவதால் அதை கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான தீர்மானங்கள் எடுப்பது தொடர்பில் சென்ற வாரம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் எண்ணக் கருவில் உருவான வாரத்துக்கு ஒரு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய பள்ளிக்குடியிருப்பு 1ம், 2ம் பிரிவுகளில் பொதுமக்களின் பூரணமான ஒத்துழைப்போடு, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தலைமையில் வீடுகள் மற்றும் பொது நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யுப், ஏ.ஜி.எம்.பர்சாத் , எம்.சஹாப்தீன் கல்முனை பிராந்திய தொற்று நோய்ப் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ. சீ.எம். பசால், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எப் எம் ஏ காதர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவ படையினர், வட்டாரங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்குகள் பரவக்கூடிய அபாயகரமாக அடையாளம் காணப்பட்ட வீடுகள், பொதுக் காரியாலயங்கள் கண்காணிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து பணிகளையும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். எனவே டெங்கு பரவலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக எதிர்வருகின்ற ஒவ்வொரு வாரமும் எல்லா வட்டாரங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்களுடைய வீடுகள், பொது நிறுவனங்களை துப்பரவு செய்து வருகின்ற அதிகாரிகளுக்கு சிரமங்களை  ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

Slideshow

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe