Ads Area

உள்ளூராட்சி சபைத் தேர்தல்..!

 தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா


எந்தவொரு செல்வாக்குக்கும் அடிபணியாமல் குறிப்பிட்ட நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நேற்று (15)  உறுதியளித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்றத்திலுள்ள கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று தேர்தல்கள் ஆணைக்குழுவை நேற்று (15) சந்தித்த போதே புஞ்சிஹேவா இந்த உறுதிமொழியை வழங்கினார்.


தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாமென, தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, இது தொடர்பான உறுதிமொழியை வழங்கினார்.

thanks-thinakaran



கலந்துரையாடலின் முடிவில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு எழுத்து மூலமான கோரிக்கையடங்கிய கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளித்தார்.


தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடுபடுவதாக இன்று (15) கூடிய கட்சித் தலைவர்கள், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe