Ads Area

நிந்தவூர் ஜெம்ஷித் ஹஸன் தேசிய இலக்கிய விருது பெற்றார்.

நூருல் ஹுதா உமர்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலாசார இலக்கியப்போட்டிகள் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடாத்தப்பட்டு, தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக்கான விருது வழங்கல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழக மற்றும் திறந்த பிரிவில் சிறுகதையாக்கப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழக மாணவன் எச்.கே.முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன், தேசிய ரீதியில் முதலாவது இடத்தோடு தங்கப்பதக்கத்தைப்பெற்றார்.

பாடசாலைக்காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர், சென்ற வருடம் நடைபெற்ற இளைஞர் விருது வழங்கலில் சிறுகதையாக்கத்தில் தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe