Ads Area

ரொனால்டோ அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.!

 இதனால்  கிறிஸ்டியானோ ரொனால்டோ , மான்செஸ்டர் அணியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், மேலாளர் எரிக் டென் ஹாக் மீது தனக்கு "மரியாதை இல்லை" என்று தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை விட்டு உடனே விலகுகிறார். இரு தரப்பினரும் இணைந்து எடுத்த முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது.


மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ரொனால்டோ மான்செஸ்டர், அணியில் இருந்து நான் விலகி உள்ளேன்.எனினும் ரசிகர்களுடன் உள்ள என்னுடைய பந்தம் என்றும் நீங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.


மான்செஸ்டர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்திருக்கிறார்.

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இந்த பிரச்சினை அவருடைய உலகக் கோப்பை கவனத்தை சிதறடிக்கும் என கால்பந்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe