(எம்.என்.எம்.அப்ராஸ்)
கரவாகு கலை இலக்கிய மன்றம் மற்றும் வியூகம் ஊடக வலையமைப்பு ஏற்பாட்டில் அக்குறனை அஸ்மியா நிஸாம் எழுதிய "மனிதம் இல்லா பூமி"கவிதை நூல் அறிமுக நிகழ்வு கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் தலைமையில் அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நாளை (12)சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந் நூல் அறிமுக நிகழ்வில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும்,முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் மற்றும் கௌரவ அதிதிகள் சிறப்பு அதிதிகள்கலை இலக்கிய அதிதிகள்,ஊடகவியலாளர்கள்
என பலரும் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கண்டி மாவட்டம் அக்குறனையை சேர்ந்த அஸ்மியா நிஸாமின் முதலாவது வெளியீடு நூல் "மனிதம் இல்லா பூமி" என்பது குறிப்பிடத்தக்கது.