நூருல் ஹுதா உமர்
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் பாடசாலையின் ஆசிரியர் எஸ். சத்தியசீலன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வி.லிங்கேஸ்வரன், பல்கலைக்கழக மாணவிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ். காந்தன், கி.சங்கீத், சி.தனோஜன், சி.துலக்சன், மா.ஜெகனாதன், நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு இணைந்த கரங்கள் அமைப்பினரால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைத்தனர்.
இப்பணிக்கு முழுதான நிதிப் பங்களிப்பை இணைந்த கரங்கள், தர்சன் சௌந்தராஜன், ராஜரெட்ணம், ஆகியோர் வழங்கியிருந்தனர். வாகரை பிரதேசத்தின் பிரதான பாதையில் இருந்து காட்டுப் பாதையில் உள்ளே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பாடசாலைக்கு தினமும் சென்று ஆசிரியர்கள் சிரமப்பட்டு கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். ஒரு தடவையே இப் பிரதேசத்திற்கு பேருந்து வந்து செல்கின்றது அதே வேளை வருகின்ற பாதையும் வாகனம் செல்ல முடியாத நிலையில் காணப்படுவதுடன் இக் கிராமத்தில் மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கூலித்தொழிலையே நாளாந்தம் நம்பி வாழ்கின்றனர். அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகள் கூட இடம்பெறுவதில்லை இருந்த போதிலும் மாணவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்கள் மூலம் பிரத்தியோக வகுப்புகள் பாடசாலையின் ஆசிரியர்களினால் நடாத்தப்படுகிறது.
இங்கு குறிப்பிடத்தக்கது.