பிரதேச பொதுமக்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வீரமுனை வாசிப்பு நிலையம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ. எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் பூ.பரம தயாளன் வீரமுனை வாசிப்பு நிலையத்திற்கு ஒரு தொகுதி நூல்களை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் ஆகியோரிடம் கையளித்ததுடன் அதனை சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களினால் வீரமுனை வாசிப்பு நிலையப் பொறுப்பாளர் ஏ. வீ.எம்.ஹம்ஸா அவர்களிடம் கையளித்தார்.
இதன்போது வாசிப்பு நிலைய வளாகத்தில் தவிசாளரினால் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
வீரமுனை பொது நூலக கட்டிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ. எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் எண்ணக்கருவில் வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்.கோவிந்தசாமி அவர்களினால் முன்மொழியப்பட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நம்பிக்கையாளர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800