உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை லயன்ஸ் கழகத்துடன் சம்மாந்துறை பிரதேச சபை, ஆதார வைத்தியசாலை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், பொலிஸ் நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நீரிழிவு தின விழிப்புணர்வு நடைபவணி இன்று சம்மாந்துறையில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நடைபவணி சம்மாந்துறை நெல்லுப்பிட்டி சந்தியிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக ஹிஜ்றா மணிக்கூட்டு கோபுரத்தின் ஊடாக அப்துல் மஜீட் மண்டபத்தை சென்றதுடன், உணவு கண்காட்சி, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, லயன்ஸ் கழகத்தின் மாவட்ட பிரதி ஆளுனர் இஸ்மத் ஹமீட், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆஸாத்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் தலைவர் இஸட்.ஏ.பஸீர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.