Ads Area

முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால், இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் - அநுரகுமார கேள்வி.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)


முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் சர்வதேச நாடுகள் இலங்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும். கருத்தடை, கொத்து ரொட்டி, கருத்தடை டாக்டர், கருத்தடை ஆடை என்கிறீர்கள். என்னதான் நீங்கள் செய்யவில்லை? ஏனைய இன மக்கள் மீது குரோதம், பகைமையை ஏற்படுத்தும் அரசாங்கமொன்று இருந்தால் உலகில் யார் நாட்டை ஏற்றுக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


2023 ஆம் ஆண்டுக்கான வரவு– செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் கூறினார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; இதனால் இது கருமையான நாடு. வெளிநாட்டுக்கு செல்ல விசாவொன்று வழங்கப்படுவதில்லை. அவ்வாறு சென்றால் திரும்பி வரமாட்டார்கள். பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு சென்ற எமது தேசிய வீராங்கனைகள், வீரர்கள், பத்துப் பேர் அங்கு தப்பியோடி விட்டனர். அவர்கள் மீண்டும் எமது நாட்டுக்கு திரும்பி வரவில்லை.

எமது நாட்டின் தேசிய வீரர்கள் நாம் பதக்கங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டிருப்பதில் பயனில்லை. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் தாம் வாழ்வதை விரும்பும். தாம் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிடவே விரும்புபவர்கள். இந்நாட்டில் அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலம் கிடைக்காது என நினைக்கிறார்கள்.


எமது நாட்டுக்கு படகில் வருகை தர வேண்டாம் என்று இலங்கையர்களுக்கு சில நாடுகள் கூறுகின்றன. இதுதான் எமது நாட்டின் நிலைமை. இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர உறவைப் பேண முடியும்.


எமது நாட்டில் ஊழல்கள் மலிந்து காணப்படுகையில், சர்வதேச ரீதியில் நிதி மோசடிகள் இடம் பெற்ற நிலையில் எமது பிரதி விம்பம் கடுமையானதாகவே உள்ளது. சர்வதேச நாடுகளுடன் எம்மால் இராஜதந்திர உறவுகளை எவ்வாறு பலப்படுத்த முடியும்.

எமது பொருளாதாரத்தில் மூன்று விடயங்கள், முக்கியத்துவம் பெற வேண்டும். பொருட்களின் உற்பத்தியும் சேவையும் அதிகரிக்கப்படவேண்டும். பொருளாதாரம் கொழும்பை மையப்படுத்தி மாத்திரம் இருக்கக்கூடாது. இது கிராமங்களுக்கு பரவலாக்கப்பட வேண்டும். புதிய பொருளாதார அபிவிருத்தித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.


இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகளிலிருந்து மீண்டும் நாடு விடுதலை பெறுவதற்கும், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் ஆணையுடனான புதிய அரசாங்கமொன்று நிறைவேற்றப்பட வேண்டும். இதன்மூலமே நாடும் நாட்டு மக்களும் மீட்சி பெறுவார்கள். இதுவே நாட்டுமக்களது எதிர்பார்ப்பாகும் என்றார்.



நன்றி- விடிவெள்ளி

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe