Ads Area

சாமிக்க கருணாரத்னவிற்கு ஓராண்டு போட்டித் தடை!

 சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது.


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதேவேளை, சாமிக்க கருணாரத்னவின் பெயர் இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெறாமை குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோருமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

thanks-adaderana



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe