Ads Area

மகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர்..!

 வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை நேற்று முன்தினம் முதல் தடவையாக உலகக்கு அறிமுகப்படுத்தினார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை நேற்று முன்தினம் வடகொரியா சோதனை செய்தது. 

இச்சோதனையின்போது தனது மகள் மற்றும் மனைவியுடன் கிம் ஜோன் உன் பங்குபற்றினார் என வடகொரிய அரசுக்குச் சொந்தமான கொரிய மத்திய செய்தி முகவரகம் நேற்று தெரிவித்தது.

கிம் ஜோன் உன்னின் பிள்ளைகள் குறித்து வட கெரிய அரச ஊடகங்கள் இதற்குமுன் ஒருபோதும் எதுவும் குறிப்பிட்டததில்லை. அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவின் ஸ்தாபகர் கிம் இல் சுங்கின் பேரனான கிம் ஜோங் உன், அக்குடும்பத்தின் 3 ஆவது தலைமுறை ஆட்சியாளர் ஆவார். அவர் 2009 ஆம் ஆண்டு ரை சோல் ஜூவை திருமணம் செய்தார் என தென் கொரிய உளவு முகவரகம் தெவிக்கிறது. 2010, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும் அம்முகவரகம் கூறுகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe