Ads Area

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

 எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (19) தெரிவித்தார்.


பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,


“விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி சொன்னோம். அப்படியான சந்தர்ப்பத்தில் தாங்கள் பொருளாதார இழப்பை சமாளிக்க 14 ஆம் திகதி அல்லது 13ம் திகதி ஓடர்களை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள். அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். திங்கட்கிழமை அமைச்சரவைக்கு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு இது அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். வரும் மாதத்தில் இருந்து இந்தப் புதிய முறையை அமல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்."



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe