நூருல் ஹுதா உமர்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/தர)ப் பரீட்சையில் என்.எம். நப்றத் என்ற மாணவன் 9A சித்திகளைப்பெற்று முதன் முதலாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
முதன்முதலாக க.பொ.த (சா/த) பிரிவை ஆரம்பிப்பதில் அதிபர் ஏ.ஜி. முகமட் றிசாத் அவர்கள் எடுத்த முயற்சியும், பல்வேறு சவால்களும் முக்கியமான விடயங்களாகும். அவரோடு இணைந்து இவ் வெற்றிக்காக அயராது உழைத்த, பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர்.
அத்தோடு இப்பரீட்சைக்குத் தோற்றிய எஸ்.எச்.பாத்திமா ஹிறா 7A 2B என்ற சித்தியயைப் பெற்றதுடன் அதிகமான மாணவர்கள் A,B,C சித்திகளையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.