Ads Area

டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு.

 நேற்று  (11) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 430 ரூபாவாகும்.


மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் டீசல் விலையும் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe